சிங்கப்பூரின் அக்கினி வீரர்கள்

Raghu
3 min readJun 25, 2022

சிங்கப்பூர் குடிமகன் மற்றும் நிரந்தரவாசி (இரண்டாம் தலைமுறை) ஆண்கள் அனைவரும் கட்டாய (Conscription) தேசிய சேவை ஆற்ற வேண்டும். [National Service (Amendment) Act 1967.]

தேசிய சேவை (National Service) என்பது முழு நேர ராணுவ பயிற்சி மற்றும் சேவை.
இரண்டு ஆண்டுகள்.
16.5 வயதிலிருந்தே ஆரம்பிக்கலாம்.
ஆனால் பலரும் தங்கள் +2 நிகரான படிப்பை முடித்து விட்டு 18+ ஆரம்பிப்பர்.

⚔️ முதல் மூன்று மாதங்கள் BMT எனப்படும் Basic Military Training — அடிப்படை ராணுவ பயிற்சி. இதில் ஆயுதங்களைக் கையாளுதல், உடல் மற்றும் பலப் பயிற்சிகள், நீச்சல், தடைகளைத் தாண்டிச் செல்லும் பயிற்சி போன்றவை அடங்கும்.

🧑‍🤝‍🧑👬 இவற்றுடன் குழுவாக பணியாற்றுவது, சகோதரத்துவம், பொறுப்புடன் நடந்து கொள்வது மற்றும் தேசப்பற்று, தேசப் பாதுகாப்பு போன்றவை ஊட்டப்படுகிறது.

🚒 இவர்களுக்கு ஆயுத படைகளிலோ (Army, Navy, Airforce), காவல் படையிலோ (Police), தற்காப்பு படையிலோ (Civil Defence — Fire Station etc) பணி ஒதுக்கப்படலாம்.

⚔️ மீதமுள்ள தேசிய சேவை காலத்திற்கு ஒவ்வொரு படையிலும் பணிக்கேற்ப திறன்களுக்கான பாதைகள் இருக்கும்.
உதாரணத்திற்கு Army என்றால் Combat or Combat support or Combat Service Support — தகுதிக்கு ஏற்றவாறு பயிற்சிகள் கொடுக்கப்படும்.
அதாவது ஆயுதப்பணி, ஆயுத தயாரிப்பு, ஆயுத பராமரிப்பு, மருத்துவப் பணி, தொழில் நுட்ப பணி, நிர்வாகப்பணி, மேஜைப்பணி போன்று.

💪 இரண்டு வருட முடிவில் இவர்கள் தன்னம்பிக்கை, ஒழுக்கம், தேசத்தைப் பாதுகாக்கும் திறன் கொண்டவர்களாக வெளி வருவார்கள்.
இவர்களை ORD = Operationally Ready என்கிறார்கள்.
NS Men என்றும் அழைக்கப்படுவார்கள்.

இரண்டு வருட தேசிய சேவைக்குப்பிறகு இவர்கள் ஆயுதப்படைகளிலும் சேரலாம், அல்லது மீண்டும் சமுதாயத்தில் கலந்து படிப்பையோ வேலையையோ தொடரலாம்.

👩‍🎓 பட்டதாரி வகுப்பில் ஆண்கள், பெண்களுக்கு சம வயதினராக இல்லாமல் மூத்தவராகவே இருப்பர்.

💰பெண்கள், ஆண்களுக்கு முன்னதாகவே பட்டப்படிப்பு முடித்து வேலையில் சேர்ந்து சம்பாரிக்க ஆரம்பித்து விடுவர்.

👉 NS Men தங்களுடைய 40 வயது வரை ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட காலத்திற்க்கு (14+ நாட்கள் ) தேசிய சேவைக்கு செல்ல வேண்டும்.
இதில் பயிற்சி மற்றும் பணியும் அடங்கும்.

இது தவிர எப்பொழுதெல்லாம் அழைப்பு (Mobilisation) வருகிறதோ அப்போதெல்லாம் ஆஜராக வேண்டும்.
இதுவும் ஒரு அவசர கால பயிற்சியாகும்.

இந்த கடமைகளை உணர்ந்து சிங்கப்பூரர்கள் பலர் ஓடுவது, உடற்பயிற்சி செய்வது போன்ற காட்சிகளை நாள் முழுவதும் பார்க்கலாம். 🏃🏋️‍♂️ 🏊‍♀️

👉 பயிற்சியோ, பணியோ, அவசர அழைப்போ இதற்கு இவர்களின் அலுவலகம், குடும்பம் ஆதரிக்கும் வகையில் அரசாங்கம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
கம்பெனிகள் தேசிய சேவையை காரணம் காட்டி ஒரு தொழிலாளரின் சம்பளம், விடுமுறை, சலுகைகள் ஆகியவற்றில் கை வைக்க முடியாது.
தேசிய சேவையாளர்களை ஆதரிக்கும் கம்பெனிகளுக்கு அங்கீகாரங்கள் அளிக்கப்படுகின்றன.
விருதுகளும் உண்டு.

✈️ தேசிய சேவையாளர்கள் நாட்டை விட்டு நெடுங்காலம் (14+ days) செல்ல அனுமதி பெற வேண்டும்.

🇸🇬 தேசிய சேவைக்குட்பட்ட எவரும் இதை தவிர்க்க முடியாது.
தேசிய சேவைக்கு வராமல் டிமிக்கி கொடுப்பவர்களுக்கு தண்டனையும் அபராதமும் உண்டு.

தள்ளிப்போடுவதற்கு (Deferment) மிக மிகச் சிலருக்கே அனுமதி வழங்கப்படுகிறது.
இவையும் செய்தியாகின்றன. 👇
சமீபத்தில் Joseph Schooling (Olympic 2016 Swimming Butterfly 100m Gold Medal) மற்றும் Quah Zheng Wen (Olympic Swimmer) தங்கள் பயிற்சி, போட்டி முடியும் வரை மட்டும் தள்ளிப் போட அனுமதிக்கப்பட்டார்கள்.

🇸🇬 தேசிய சேவை காலத்திற்கு ஊதியமும் வழங்கப்படுகின்றது.
இவர்களுக்கு பயிற்சிக் காலங்களில் மருத்துவ, விபத்து காப்பீடு உண்டு.
இவர்கள் களைப்பாற, களிக்க ஆஃபீசர்ஸ் க்ளப் களும் உள்ளன. 🏊‍♂️ 🍷

🇸🇬 நிரந்தரவாசிகள் அனைவருமே வெளிநாட்டினர் தானே, அவர்களுக்கும் தேசிய சேவை கட்டாயமா ? ஆமாம்.
இரண்டாம் தலைமுறை ஆண் என்றால் = கட்டாயமே.
இவர்கள் தேசிய சேவை முடித்த பிறகு சிங்கப்பூர் குடிமகனாக விண்ணப்பித்து தங்கள் பூர்வ குடியுரிமையை விட்டு சிங்கப்பூரராக மாறலாம்.

💪 சிங்கப்பூர் பாஸ்போர்ட் வலிமை மிக்க பாஸ்ப்போர்ட்டாகும்.
170 தேசங்களுக்கு விசா இல்லாமலேயே பயணம் செய்யலாம். 🌍

🚁 தற்கால சூழ்நிலைகளைக் கருதி பயிற்சி காலங்கள், பயிற்சி முறைகள், தகவல் தொழில்நுட்ப பயிற்சிகள், drone பயிற்சிகள் என பல மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

🎞 சிங்கப்பூரில் “தேசிய சேவை” வாழ்க்கை பற்றி Ah Girls Go Army மற்றும் Ah Boys to Men என்ற sequel திரைப்படம் 4 வந்திருக்கிறது.

🥹 தேசிய சேவையை தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும், தங்கள் நாட்டிற்கும் ஒரு பெருமையாகவே சிங்கப்பூரர்கள் கருதுகிறார்கள். 👏👏👏

இவ்வகை 2 வருட ராணுவ ஏற்பாடோ, 4 வருட வாய்ப்போ, இளைய சமுதாயத்தில் சகோதரத்துவம், பொறுப்புணர்ச்சி, வீரம், தேசியம், நாட்டு நலன் போன்றவை வளர்ந்தால் வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லது தானே ? 🇮🇳

Credits:- Singapore NSD Employers Handbook, Mindef etc.

--

--

Raghu

பகிர்தல் பல்கிப் பெருக்குமே