Raghu
1 min readDec 31, 2022

--

காந்தாரா ராகம், கழக தாளம்

சாம்பார் சாதம்
அபார ருசிகரம்

உருளை காரம்
ரொம்ப விசேஷம்

இளநீர் பாயசம்
இனிக்கும் அமுதம்

இஞ்சி சாரம்
இயற்கை வைத்தியம்

அன்னம் ஆகாரம், உயிரின் ஆதாரம்
பசியும் ருசியும், நிரந்தர தத்துவம்

ப-ப ம-க-ரி-ச ம-க-ரி-ச
ம-க-ரி-ச க-நி-ச- ரி-ச
ச-ரி-க-ம-ப ப-ம-க-ரி-ச
ம-க-ரி-ச ம-க-ரி-ச
ச-ரி-க-ம-ப-த-நி-ச
க-நி-ச ரி-ச ச-நி ச-ரி-க-ம

* + * + *

ஆண்டியின் மகன் ராஜா
ஏக்கர் கணக்காய் செய்தான் தாஜா
கிழிந்து போனது அவன்
திராவிட காஜா

பன்னீரின் சகவாசம்
பழனிக்கு சளிதோஷம்
சாமானியர் சிறைவாசம்
உடன்பிறப்புகள் மந்தஹாசம்

உதயத்தின் எழுச்சி
வாரிசுகளுக்கு மகிழ்ச்சி
படித்தவருக்கு இகழ்ச்சி
மூத்தவர்களோ மிரட்சி

கறுப்பு பணத்திற்கு
சிவப்புக் கம்பளம் விரித்தோர்
கடிகார சப்தத்தால்
விடியலில் வெளிவருவாரோ ?

வா-ரி-சா ரி-சா வா-ரி-சா
நி-தி-யா த-நி-த-யா
உ-த-யா நி-தி-யா உ-த-யா உ-த-யா

💐 💐 💐

நேற்றைய தேக்கங்கள் தீரட்டும்

இன்றைய ஏற்றங்கள் தொடரட்டும்

நல்ல நோக்கங்கள்

நாளையே

நிறைவேறட்டும்.

💐 💐 💐

2023 வளமான, ஆரோக்கியமான, மகழ்ச்சிகரமான, சிறப்பான ஆண்டாக அமையட்டும்.

🪷🌹🪷

--

--

Raghu

பகிர்தல் பல்கிப் பெருக்குமே