Raghu
3 min readAug 19, 2022

--

அமுதப் பெருவிழா

வளங்கள் எல்லாம் சுரண்டப்பட்டு, சொத்துக்கள் கொள்ளைடிக்கப்பட்டு, பல விதங்களில் பலவீனப்படுத்தப்பட்ட நிலையில் நாம் நம் சுதந்திரத்தை அடைந்தோம்.

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் —
உங்கள் இல்லத்தில் கொடி ஏற்றி கொண்டாடினீர்களா ?

இந்த 75 ஆண்டுகளில் என்ன சாதித்தோம் என்று கேட்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

இந்தியா சாதித்ததாக, வளர்ச்சி கண்டதாக, ஏற்றம் அடைந்ததாக, மக்களை முன்னேற்றியதாக என்னுடைய பார்வையில், சில விஷயங்களை உங்களுடன் பகிர்கிறேன்.

🚂 Rail Booking:- ரயில் புக்கிங்
ஒவ்வொரு கோடை விடுமுறையும், உறவினர் கல்யாண ஏற்பாட்டின் சமயங்களிலும் நான் அதிகமான நேரத்தை செலவழித்தது சென்னை — சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் தான்.
டிக்கெட் புக் செய்வதற்காக, பல படிவங்களை நிரப்பி, சில்லறை காசுகளையும் பை நிறைய நிரப்பி காலையிலே வரிசையில் நிற்பேன்.
Waiting list, வந்து விட்டால் போச்சு — வரிசையை விட்டு வெளியேறி, போன் பூத்திற்கு ஓடி, மாற்று படிவங்கள் நிரப்பி, கெஞ்சி கூத்தாடி வரிசையில் மீண்டும் சேர்ந்து — டிக்கெட் எடுத்து முடிப்பதற்குள் சரியான டென்ஷன் தான்.
இன்றைக்கு IRCTC உலகமே ஒத்துக்கொண்ட அதிசயம்.

🎬 Indian Cinema:- இந்திய சினிமா
உலகத்தின் ஆகப்பெரிய பொழுதுபோக்கு சினிமா தயாரிக்கும் நாடாக இந்தியா இருந்தாலும் Bahubali, RRR போன்றவை பல நாடுகளில் இந்தியரல்லாதவர்களையும் மகிழ்வித்து வசூலை குவிக்கின்றன.
வெளி நாட்டினரை இந்திய பாடல் காட்சிகளும், நடனங்களும், settingsம் கவர்ந்து இழுக்கின்றன.
யூடியூபில் Allu Arjun, Sai Pallavi பாடல் நடனக் காட்சிகளுக்கு உலகத்தவர் மத்தியில் பெருத்த வரவேற்பு இருக்கிறது — Reaction videos, Dance Covers மூலமாக. இவற்றிற்கே ஒரு சில மில்லியன் பார்வைகள் என்றால் அசலுக்கு நூறுக்கணக்கான மில்லியன் பார்வைகள் சாட்சியாக அமைகின்றன.

🏃‍♂️Sports:- விளையாட்டு
சமீபத்திய CWG 2022ல் நாம் பெற்ற பதக்கங்கள் ஹாக்கி, துப்பாக்கி சுடுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை விட்டு தடகளம், டேபிள் டென்னிஸ் முத்திரை பதித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.
பாட்மின்டனில் பிரகாஷ் படுகோனே, விமல் குமார், கோபிசந்த் இடைவெளிக்குப் பிறகு Saina, Sindhu, Kidambi — தொடர்ந்து RankiReddy+Shetty, Lakshya, HS Prannoy போன்றோர்கள் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது என் ஆசை.
உலக கிரிக்கெட்டின் “தாதா” இந்தியா தான். தாதா மட்டுமல்ல IPL மூலமாக உலகின் பல கிரிக்கெட்டர்களுக்கு “அன்னதாதா” வும் கூட.

🍚 Foreign Tours and Food:-
நடுத்தர வர்க்கத்து இந்தியர்கள் எல்லோரிடமும் பாஸ்போர்ட் இருக்கிறது.
பல தேசங்களுக்கு சுற்றுலா செல்கிறார்கள்.
இதன் பலன் தான் என்ன ?
எந்த பிரபலமான சுற்றுலா தலங்களுக்கு சென்றாலும் நல்ல சாப்பாடு கிடைக்கிறது.
Cruiseல் சென்றால் Jain உணவு கிடைக்கிறது. 😉

🧑‍💻 IT:-
Y2Kவில் தொடங்கிய IT ஓட்டம் இந்தியர்களை எல்லா நாடுகளிலும் கொண்டு சேர்த்திருக்கிறது.
இன்று IT மட்டுமல்லாமல் Finance, Legal, சேல்ஸ் என்று பல துறைகளிலும் இருக்கிறார்கள்.
இந்திய accent எல்லா நாட்டினர்க்கும் பழகி விட்டது.
எந்த நிறுவனமாக இருந்தாலும் எந்த துறை சார்ந்த conference callஆக இருந்தாலும் ஒரு இந்திய குரலாவது ஒலிக்கிறது.
பெரிய நிறுவனங்களுக்கு இந்தியர்கள் CEO ஆவதும் அவ்வப்போது வரும் செய்தி. 👏👏👏

📈 BSE 60000 / NSE 18000:-
அச்சடிக்கப்பட்ட ஷேர் சர்டிபிகேட் இருந்த காலத்தில் கொத்தாக 1–2லட்சம் மதிப்பானவற்றை ஸ்கூட்டரில் வைத்து என் நண்பன் ஒருவன் டீ குடிக்க சென்றான். திரும்பி வருவதற்குள் சர்டிபிகேட்கள் காணாமல் போய் இருந்தன. திருடப்பட்டதை போலிஸ் கம்பளைண்ட் கொடுத்து, எல்லா கம்பெனிகளுக்கும் கடிதம் எழுதி, அவற்றிற்கு டூப்ளிகேட் வாங்குவதற்கு வருடங்கள் பிடித்தன. ஆனால் இப்போது ஷேர்கள் DEMAT செய்யப்பட்டப் பிறகு திருட்டு, போலி கையெழுத்து, டூப்ளிகேட் போன்ற பிரச்சினைகள் இல்லாமல் ஷேர் பரிவர்த்தனை வெகு சுலபமாக நடை பெறுகிறது.
இன்று உலக முதலீட்டாளர்கள், இந்திய கம்பெனிகளின் வர்த்தக மதிப்பை அறிந்து BSE/NSEயை, TASMACகை முற்றுகையிடும் மதுபிரியர்கள் போல், மொய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
உலகப் பணக்காரர்களில் Ambani, Adaniயை சேர்த்தது மட்டுமல்லாமல் பல நடுத்தர வர்கத்தினரையும் பங்கு சந்தை கோடீஸ்வரர்களாக்கி உள்ளது. 💰💰💰

இன்று வீடெங்கிலும் சாதனங்கள், வீதிகளெங்கும் வாகனங்கள், கரங்களிலெல்லாம் கைபேசிகள்….
இந்த வளர்ச்சி, மாற்றம் எல்லாம் தனி மனித முயற்சியிலும், அரசாங்க முயற்சியிலும் வந்தவை.
ஆனால் கூட்டு முயற்சியினால் அல்ல.
திட்டமிட்ட கூட்டு முயற்சி பல மடங்கு ஏற்றம் தரும். 💪 💪

🇮🇳 🇮🇳 🇮🇳 என்னுடைய சுதந்திர தின அமுதப் பெருவிழா வாழ்த்து:-
நேற்றைய தேக்கங்கள் முடியட்டும்
இன்றைய ஏற்றங்கள் தொடரட்டும்
நல்ல நோக்கங்கள்
நாளையே
நிறைவேறட்டும். 🇮🇳 🇮🇳 🇮🇳

🙏 ஜெய் ஹிந்த் 🙏

--

--

Raghu

பகிர்தல் பல்கிப் பெருக்குமே