Raghu
3 min readAug 27, 2022

--

அடுத்த பிரதமர் யார் ?

ஜனநாயகத்தில் யார் அடுத்த பிரதமர் என்பது தினமும் மக்களால் கேட்கப்படும் கேள்வி.
நாட்டின் தலைவர் மௌனகுரு என்றால் “அடுத்த முறையும் இவரே இருந்தால் நன்றாக இருக்குமே” என்று அவரைச் சார்ந்தவர்கள் வேண்டிக்கொண்டிருப்பார்கள்.
நாட்டின் தலைவர் விஸ்வகுரு என்றால் “இவரைப் போல் ஒருவர் வந்துவிடக்கூடாதே” என்று வேண்டிக்கொண்டிருப்பார்கள்.

மக்கள் — ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் எனக்கொரு கவலையில்லே — வகையறா தான்.
தனி மனித வாழ்க்கையில் நிம்மதி, மாற்றம், முன்னேற்றம் …
தலைவன் அப்புறம் தான்.

யார் அடுத்த பிரதமர் ? மோடியா ? யோகியா ? ராஹுலா ? கெஜ்ரிவால் ?

அடுத்த பிரதமர் வெளி நாட்டில் படித்தவரோ ?

ராஹுலா ?

பிரபலமான பல்கலைக்கழகத்தில் படித்தவரோ ?

கெஜ்ரிவாலோ ?

மேற்படிப்பு படித்த நிதி அமைச்சரோ ?

நிர்மலா சீதாராமன் ?

வயது 50 பக்கத்தில்

PTR ?

நாம ரொம்ப பெரிய நாட்டிற்குப் போய்ட்டோம்..

நாம் பேச வந்தது சிங்கப்பூரைப் பற்றி..

சிங்கப்பூரின் நான்காவது தலைமுறை தலைவர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) என்று சமீபத்தில் ஆளும் கட்சி அறிவித்திருக்கிறது.

யார் இந்த லாரன்ஸ் வோங் ?

அதற்கு முன் சிங்கப்பூரின் கடந்த பிரதமர்களைப் பற்றி:-
1. முதல் பிரதமர்:- லீ க்வான் யூ (Lee Kuan Yew) 1959–1990.
பதவிக்கு வரும் போது வயது 36.
அகில உலகத்திற்கும் சிங்கப்பூர் என்றால் நினைவிற்கு வருவது இவர் தான்.
நாட்டின் முன்னோடி, உறுதியான அடித்தளம் அமைத்து மூன்றாம் உலகமாக இருந்த நாட்டை முதன்மையான நாடுகளில் ஒன்றாக உயர்த்திக் கொண்டு வந்தவர்.
தன்னுடைய 67 வயதில் அடுத்த தலைமுறை வரவேண்டும் என்று பிரதமர் பதவியை துறக்கிறார்.

2. இரண்டாம் பிரதமர்:- கோ சோக் டோங் (Goh Chok Tong) — 1990–2004.
பதவியேற்கும் போது வயது 49.
லீ க்வான் யூ வால் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்றாம் பிரதமருக்காக நாற்காலியை காப்பாற்றுபவர் என்று சொல்லப்பட்டாலும் நாட்டை திறம்பட நடத்தி தனெக்கென ஒரு பெயரை சம்பாதித்தார்.
தன்னுடைய 63ம் வயதில் அடுத்த தலைவருக்காக வழி விடுத்தார்.

சிங்கப்பூர் மலேசியா வில் இருந்து பிரிந்தது 1965.
முதல் பிரதமர் லீ குவான் யூ அமைத்த அடித்தளம் —
இளம் தலைவர்கள் பொறுப்பிற்கு வர வேண்டும்.
தலைவர்களை அடிக்கடி மாற்றாமல், அவர்களுக்கு தொலைநோக்கோடு கொள்கை முடிவுகளை எடுக்க, ஸ்திரமான ஆட்சி நடத்த அவகாசம் கொடுக்க வேண்டும்.
தகுதி அடிப்படையில் அடுத்த தலைமுறையை தேர்ந்தெடுத்து, பழக்கி,
கனிந்த நேரத்தில் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.

3. மூன்றாம் பிரதமர்:- லீ சென் லூங் (Lee Hsien Loong) — 2004 — இன்று வரை.
இவர் லீ க்வான் யூ வின் மூத்த மகன். ராணுவ பிரிகேடியர் ஜெனரல்.
பதவியேற்கும் போது வயது 52.
பதவிக்கு வரும் போது முன்னாள் தலைவர்களின் வயதை பார்க்கும் போது இவர் கொஞ்சம் லேட்டு.
அடுத்த தலைவருக்கு வழி விட திட்டமிட்டிருந்த வயது 70, இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

லீ குடும்பத்தில் பிரதமரைத் தவிர வேறு எவரும் அரசியலில் இல்லை.
ஆனாலும் அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை திடீரென்று இறக்கி விடுவார்களோ என்ற சந்தேகம் சிலருக்கு இருந்தது.

சமீபத்தில் ஒரு இளம் தலைவர் துணைப் பிரதமராக அறிவிக்கப்பட்டதில் இந்த சந்தேகத்திற்கு ஒரு முடிவு வந்துவிட்டது.

நான்காம் தலைமுறை தலைவர்கள்:-
1. Heng Swee Keat முன்னாள் சிங்கப்பூர் நிதி ஆணையம் (MAS) உயர் அதிகாரி. ஹார்வர்டில் MPA படித்தவர் — துணைப் பிரதமர், பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர்.

2. Chan Chun Sing முன்னாள் மேஜர் ஜெனரல். Sloan MIT — MBA.
கல்வி அமைச்சர்

3. Ong Ye Kung முன்னாள் தேசிய தொழிற்சங்க தலைவர். LSE and Swiss MBA
சுகாதார அமைச்சர்

4. Lawrence Wong முன்னாள் எனர்ஜி ஆணையம் தலைவர்.
துணைப் பிரதமர், நிதி அமைச்சர்

ஒருவர் மட்டும் Masters, PhD, MBA என்று படித்திருந்தால் உடனே ஒரு “நிதி அமைச்சர்” பார்சல் போட்டு அவரை பேச விட்டு வேடிக்கைப் பார்க்கலாம். 😉

எல்லோருமே படித்த, திறமைசாலிகளாக இருந்தால் ?

அடுத்த தலைமுறை தலைவர் என அடையாளம் காணப்பட்ட துணைப் பிரதமர் Heng Swee Keat உடல் நிலை காரணமாக பிரதமர் லீ க்கு அடுத்த தலைமுறை தலைவவரை பதவியில் அமர்த்தும் வரை பதவியில் இருக்க வேண்டிய கட்டாயம்.

அடுத்த தேர்தல் 2025ல்.
இதில் லாரன்ஸ் முன்னிலைப்படுத்தப்படுவார்.
இவர் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் BSc — University of Wisconsin–Madison, MA — Universty of Ann-Arbor Michigan, படித்து மேலும்
MPA — Master of Public Administation — Harvard University முடித்தவர்.
தற்போது துணைப்பிரதமர், நிதி அமைச்சர் பொறுப்புகளை வகிக்கிறார்.

covid 19 இடர்பாட்டை சமாளிக்க அமைத்திருந்த அமைச்சுக்குழுவிற்கு தலைமை ஏற்று திறம்பட செயல்பட்டார்.

இவர் காலத்தில் பொறுப்புக்கு வரட்டும்.
இவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள நாமும் அந்த காலத்திற்கு காத்திருப்போம்.

சரி . . . சிங்கப்பூரின் அடுத்த பிரதமர் அடையாளம் தெரிந்துவிட்டது…

இந்தியாவிற்கு ?

பாபா? AK 49? பப்பு ? தீதி ?

இந்தியாவின் தலைமை பொறுப்பிற்கு உங்கள் விருப்பமான நபர் யார் ?

image credits:- www

--

--

Raghu

பகிர்தல் பல்கிப் பெருக்குமே